மாகாணத் தேர்தல் பற்றி சுதந்திரக்கட்சி - பொதுஜன பெரமுன விசேட பேச்சு
மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலஙகா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த கட்சியின் சார்பில் தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர, லசந்த அழகிய வண்ண ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பசில் ராஜபக்ச, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இதனிடையே மாகாண சபைத் தேர்தலை நடத்தும் விதம் தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
Post a Comment