Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாத சவால்களை வெற்றிகொள்ள, அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது - விமல்



நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச. பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன்இ ஒற்றையாட்சி முறைமையின் கீழான அம்சங்களை பாதுகாக்க  அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் இலக்கை திசை திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன என்றார்.

அநுராதபுரம்- சல்காது பிரதேசத்தில், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 'மேட் இன் ஸ்ரீ லங்கா' உற்பத்தி பொருள்கள் அடங்கிய கண்காட்சியைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

'ஜெனீவா விவகாரம் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனீவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது' என்றார். 

 ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதை அரசாங்கத்தின் சூழ்ச்சியென  எதிர்தரப்பினர், பராளுமன்றில் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள். ரஞ்சனின் வெற்றிடத்துக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டதும் எதிர்க்கட்சியினர் அமைதியடைந்து விட்டார்கள் எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க சிறை  செல்லவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவர் சிறை சென்றுள்ளார் என்பதை எதிர்த்தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவரது விவகாரத்துக்கு அரசியல் ரீதியில் இனியொருபோதும் தீர்வு காண முடியாது என்றார். தமிழ்மிரர்

2 comments:

  1. ராஜபாக்ச அரசாங்கத்தை கவிழ்க்க ஜனாதிபதி பதவியை நோக்கி இந்தியாவால் களமிறக்கபோகும் புதிய முகம் தான் இந்த விமல் வீரவங்கிச.காரணம் இவனிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் இஸ்லாமிய வெறுப்பு.

    ReplyDelete
  2. நாடகம் பல்வேறு கோணங்களையும் விரிவுகளையும் அடிக்கடி எடுக்கின்றது என்பது இந்த பூறுவன்சவின் போக்கு எடுத்துக்காட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.