புர்கா என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் விரும்பவில்லை, முகத்தை மூடுவதையே நாம் தடை செய்துள்ளோம் - பாதுகாப்புச் செயலாளர்
பொதுவாக நாம் அனைத்து வழிகளிலும் முகத்தை மூடுவதை நாம் தடை செய்துள்ளோம். அதற்கான சட்ட வரைபு இன்று தயாராகிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் அதனை புர்கா என அழைப்பதில்லை. ஒரு மதத்தை இலக்கு வைத்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையல்ல அது. புர்கா என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட ரீதியாக அதனைக் கையாள்வதற்கான சூழலை நாம் உருவாக்குவோம். நாம் யாரையும் அவமதிக்கும் வகையில் நாம் இதனைச் செயற்படுத்தவில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பை, தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.
மனித உரிமைகளின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்ஸர்லாந்திலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. ஆகவே ஏதாவது ஒரு இனத்தை மதத்தை இலக்கு வைத்து இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அறிவிலிகள்...
ReplyDeleteஐயாமுல் ஜாஹிலியாக்கள்...
முகத்தை மறைக்க கூடாது..
முகக்கவசம் அணிய வேண்டும்..
🤭🤭🤭
Really?????
ReplyDeleteHasbunalllahu wanihmal waqeel
ReplyDeleteதவறு செய்யும் பிறமதத்தவர்களும் புர்கா அணிந்து தப்பிப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு என்பது கசப்பான உண்மை. அதனால் முகம் மூடி நடமாடுவது ஆபத்தானதே. ஆனால் உங்கள் அமைச்சர்கள் சிலரும் சமயக்காவலர்கள் சிலரும் முஸ்லிம்களை பழிதீர்க்க வந்த சட்டமாக சிங்கள அடிப்படைவாதிகளிகளிடம் காட்ட முற்படுகின்றனர். சரத் வீரசேகர போன்றோர் நித்திரையிலும் புர்கா புர்கா என்று தானே அலறுகின்றனர். அவர்களுக்கு முதலில் விளக்கம் கொடுங்கள்.
ReplyDeleteநீங்கள் பரிசுத்த மானவர்களாச்சே =#
ReplyDelete