Header Ads



அஹ்னப் ஜெஸீமின் கைதும், தடுத்துவைப்பும் - பயங்கரவாத பிரிவினரிடம் அறிக்கை கோரியது மனித உரிமை ஆணைக்குழு


மன்னாரை சேர்ந்த முஸ்லீம் கவிஞர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் அறிக்கை கோரியது மனித உரிமை ஆணைக்குழு

மன்னாரை சேர்ந்த கவிஞர் அஹ்னாவ் ஜசீம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இலங்கைமனித உரிமை ஆணைக்குழு உத்தரவி;ட்டுள்ளது.

ஏப்பிரல் 8 ம் திகதிக்கு முன்னர் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

மன்னாரை சேர்ந்த கவிஞரின் கைது குறித்து பல கரிசனைகள் எழுந்துள்ள நிலையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

மன்னாரை சேர்ந்த கவிஞர் தனது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை எலிகடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவது குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மன்னாரை சேர்ந்த கவிஞர் அவர் கைதுசெய்யப்பட்டவேளைதெரிவிக்கப்பட்ட காரணங்களிற்காக விசாரணை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுவது குறித்தும் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையை கோரியுள்ளது.

ஜசீம் கடந்த வருடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். தினக்குரல்


No comments

Powered by Blogger.