Header Ads



உடலை புதைக்கச்சென்ற போது குளவிகள் தாக்குதல் - சடலத்தை அவ்விடத்திலே வைத்துவிட்டு தப்பியோட்டம்


-T M-

சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே சடலத்துடன் சென்றிருந்தவர்கள் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம், கண்டி, மஹியாவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கண்டி- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலத்தை மயான பூமியில் வைத்துவிட்டு, இறுதி சடங்குகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பட்டாசும் கொளுத்தப்பட்டுள்ளது.

அந்த சத்தத்துக்கு களைந்த குளவிகள் கடுமையாக கொட்டியுள்ளன. இதேவேளை, அந்த மயானத்தை சுற்றியிருக்கும் மரங்களில் பெருமளவில் குளவி கூடுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சடலத்தை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். எனினும், சவப்பெட்டி மூடியிருந்தமையால் சடலத்தின் மீது குளவி கொட்டவில்லை. அதேவேளை, இருட்டியதும் மயானத்துக்குச் சென்ற மற்றும் சிலர் சடலத்தை நல்லடக்கம் செய்துள்ளனர்

1 comment:

  1. Very Good Punishment from nature.... for destroying the nature by using Fire crackers..

    ReplyDelete

Powered by Blogger.