பசுவை கொன்ற நபர் குத்திக் கொலை - பிணையில் வீடு திரும்பியிருந்த போது சம்பவம்
மின் கம்பியில் சிக்க வைத்து பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் வீடு திரும்பியிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஊரகஸ்மங்கஸ் சந்தி, கலுவலகொட பகுதியில் நேற்றிரவு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் இன்று (23) உயிரிழந்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
62 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
பலியானவர் பசுவின் உரிமையாளரின் மகனால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பசு என்கிற வார்த்தையை தவிர்த்துக்கொள்ளுங்கள் பசு என்பது இந்து தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் சொல். மாடு என்கிற சொல் போதுமானது
ReplyDelete