மல்கம் ரஞ்சித மீது, இலங்கை ஆசிரியர் சங்கம் விமர்சனம்
இலங்கையில் கத்தோலிக்க பாடசாலைகள் என எதுவும் இல்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் முறையான அனுமதியைப் பெறாமலேயே, கத்தோலிக்க பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி மூடப்படும் என பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவித்திருந்ததாக அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பேராயரின் கூற்றுக்கு அமைய, ஏப்ரல் 21ஆம் திகதி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள் அரச உதவி பெறும் பாடசாலைகள் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பாடசாலைகள் 1960ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கம் மற்றும் 1961ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
அந்த பாடசாலைகளின் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கல்வி அமைச்சினால் வழங்கப்படுவதாகவும், இந்த பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமைய நிர்வகிக்கப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பாடசாலைகளை நிர்வகிக்க கல்வி அமைச்சில் தனியான பிரிவு காணப்படுவதோடு, இதற்கென பணிப்பாளர் ஒருவர் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த சூழலில், கல்வி அமைச்சின் முறையான அனுமதியின்றி கத்தோலிக்க பாடசாலைகள் என பேராயரால் அறியப்படும் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி விடுமுறை வழங்கியமை கடுமையாக பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கல்வி அமைச்சு, ஏப்ரல் 9 முதல் நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்திருந்த நிலையில், மல்கம் ரஞ்சித் ஏப்ரல் 5 முதல் கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும் என அறிவித்தமையும் பாடசாலை விடுமுறை வழங்கும் விடயத்தில் சிக்கலைத் தோற்றுவித்திருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
He is the one now a big man in this country u don't know this?
ReplyDelete