Header Ads



விமானத்தில் பண மூட்டையுடன் வந்த மோடி, சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா என ஸ்டாலின் சவால்



பிரதமர் நரேந்திர மோதி வரும் விமானத்தில் சோதனை செய்வதற்கு வருமான வரித்துறையினருக்கு தைரியம் இருக்கிறதா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வடலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர் "என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி விட மாட்டோம்.

தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாக சொல்லப் போகிறார்கள். இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர் "இப்போது எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. என்ன செய்தி என்றால், மோதி வரும் விமானத்தில் பண மூட்டையுடன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரைக்கு வந்திருக்கிறார். இரவோடு இரவாக வந்திருக்கிறார். அதனால் பண மூட்டையுடன் வந்திருக்கிறார். அமித்ஷா வரப்போகிறார். அவரும் பண மூட்டையுடன் வரப்போகிறார் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறையினருக்கு, நேரடியாக அவர்கள் வரும் விமானத்திற்குச் சென்று சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா? பிரதமருக்கு ஒரு சட்டம். ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா?" என கேள்வி எழுப்பியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது BBC


No comments

Powered by Blogger.