வெளிநாடு செல்ல நாமலுக்கு, விதிக்கப்பட்டிருந்த தடை முற்றாக நீக்கம்
அமைச்சர் நாமல் ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் முற்றாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
பணச் சலவை சம்பந்தமான வழக்கில் அமைச்சர் நாமல் ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு வெளிநாடு செல்ல தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2010- 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில அரச பணத்தை தவாறாக பயன்படுத்தி, என்.ஆர். கன்சல்டன்டீஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Post a Comment