Header Ads



தாயை கவனிக்க தவறிய, மகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


-TW-

சிலாபத்தில் தாயை சரியாக கவனித்துக் கொள்ளாத மகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாதம்பே நகரத்தில் யாசகத்ததில் ஈடுபடும் தாயை பொறுப்பேற்குமாறு மகனிடம் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பொலிஸாரின் அறிவிப்பு குறித்து கருத்திற் கொள்ளாத மகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சிலாபம், பங்கதெனினய பிரதேசத்தை சேர்ந்த இந்த தாய் நாத்தன்டிய மற்றும் மாதம்பே பிரதேசத்தில் யாசம் பெற்று வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாய் குறித்து மனிதாபிமானத்துடன் சிந்தித்து அவரை பொறுப்பேற்குமாறு மகனிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் பொலிஸாரின் அறிவிப்பிற்கமைய மகன் தாயை பொறுப்பேற்காமையினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.