அரசசார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு பணத்தைக் கொடுத்துத் தூண்டி விடுகின்றனர் - அமைச்சர் சமல்
தெதுருஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த சிந்தனையில் கூறப்பட்டிருந்த அம்பாறை மாவட்டத்தில் ரம்பகன் ஓயா நீர்த்தேக்கத்தை நாங்கள் நிர்மாணித்தோம்.
தற்போது அந்த இடத்தில் காணிகள் இருக்கின்றன. காணிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அபிவிருத்தி செய்யும் போது சுற்றாடல் ஆர்வலர்கள், அரசசார்பற்ற அமைப்புகள் அதற்கு எதிராக மக்களைத் தூண்டி வருகின்றன.
யார் இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பதை நான் கண்டறிந்துள்ளேன். எங்கிருந்து இவர்களுக்கு பணம் கிடைக்கிறது.
இவர்களின் நோக்கம் என்ன? இவர்கள் மக்களுக்குப் பணத்தைக் கொடுத்துத் தூண்டி விடுகின்றனர்.
குளம் ஒன்றை அமைத்து, காணிகளை அபிவிருத்தி செய்யவில்லை என்றால், காணிகளை மக்கள் பயன்படுத்தவில்லை என்றால், எந்த பயனுமில்லை எனவும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment