Header Ads



பொது பலசேனா குற்றத்தில் ஈடுபடுவதில்லை, தடைசெய்ய அவசியமில்லை - 6 அமைச்சர்கள் குழு தீர்மானம்


பொதுபலசேனாவை தடைசெய்யவேண்டிய அவசியமில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான் ஹாசிமின் அமைப்பு உட்பட பல அமைப்புகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளன,இந்த அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சரவை குழுவின் செயலாளர் ஹரிகுப்த ரோகணதீர தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுபலசேனா குற்றநடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு இல்லை என்பதால் அதனை தடை செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தினக்குரல்

7 comments:

  1. BiG joke in the year of 2021. Please guys go through bbs speech.thats onliy enough for guys

    ReplyDelete
  2. இது தானோ இவர்களின் ஒரே நாடு ஒரே சட்டம். ஜனாதிபதி ஆணைக்குழு தீவிரவாத குழுக்களை தடைசெய்தது. அதில் தீவிரவாத பொதுபல சேனாவும் உள்ளது. இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு இன்னொரு சட்டம்

    ReplyDelete
  3. சரியான முறையில் பார்த்தால் குற்றம் செய்தவனை விட குற்றம் செய்யத் தூண்டி அவன்தான் மிகப்பெரிய குற்றவாளி..

    ReplyDelete
  4. சரியான முறையில் பார்த்தால் குற்றம் செய்தவனை விட குற்றம் செய்யத் தூண்டி அவன்தான் மிகப்பெரிய குற்றவாளி..

    ReplyDelete
  5. குத்திவிட்டு கூத்துபார்க்கும் அமைப்பு

    ReplyDelete
  6. குத்திவிட்டு கூத்து பார்க்கும் அமைப்பு

    ReplyDelete

Powered by Blogger.