கடனை திரும்ப செலுத்துவதற்காக, நிதியை பெறுவது குறித்து முஸ்லிம் நாடுகளுடன் பேச்சு
இலங்கையின் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிதியை பெறுவது குறித்து மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வங்கியின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அடுத்த சில தினங்களில் இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியூ.டி.லக்ஷமன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிதியை பெறுவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற எதிர்பார்க்கவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் மாதமளவில் 4.1 பில்லியனாக குறைந்திருந்தது.
இந்த நாட்டில் அநியாயம் இழைப்பதும் முஸ்லிம்களுக்கு,ஓரம்கட்டுவதும் முஸ்லிம் சமூகம்,பலிவாங்குவதும் முஸ்லிம் சமூகத்திடம், ஆனால் பிச்சை கேட்பதும்,உதவிக்காக கரம்நீட்டி மானம்,மரியாதை,வெட்கம் எதுவும் இல்லாமல் குறிப்பாக ஆடையணிந்து நிர்வாணமாக பிச்சை கேட்பது முஸ்லிம் நாடுகளிடம்.நிர்வாணமுற்ற வெட்கக் கேடான இவன்களை ஓரம்கட்டுமாறு அந்த அரசாங்கங்களிடம் முஸ்லிம் சமூகம் கோரிக்ைக விடுக்க வேண்டும்.
ReplyDeleteஇதுக்கு முஸ்லிம் நல்லம்
ReplyDelete