சுற்றாடல் அழிவு, விஷ எண்ணெய் எதிர்க்கட்சிகள் பரப்பும் கதைகள் - ரோஹித்த அபேகுணவர்தன
- TW -
ஜனாதிபதியின் கிராமத்துடன் உரையாடல் வேலைத்திட்டத்திற்கு எதிராக மக்களை ஏமாற்றவே சுற்றாடல் அழிவு மற்றும் விஷ தேங்காய் எண்ணெய் கதைகளை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்காவது மரக்கட்டைகளை ஏற்றிய லொறி ஒன்றைப் பிடித்துக்கொண்டு, காட்டை அழிக்கின்றனர் என கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக ஒரு கதையை உருவாகின்றனர்.
முழு நாட்டிலும் விஷ கிருமிகளைப் பரப்ப முடியுமா என்று முயற்சித்து வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாரத்தில் ஒரு முறை கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு வழங்குவதே இவை அனைத்துக்கும் காரணம்.
நாங்கள் நேர்மையாக செய்யும் வேலைத்திட்டத்தை குழப்ப ஏதாவது செய்து மக்களை ஏமாற்ற முடியுமா என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
மக்களை ஏமாற்ற எவ்வளவு முயற்சித்தாலும் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். அதற்கான பொறுப்பு எமக்குள்ளது எனவும் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment