Header Ads



சாணக்கியனை கண்டு அஞ்சுகிறாரா பிள்ளையான்..? இல்லை என்று பதிலளித்த நாமல்


பிள்ளையான் என்னை பார்த்து பயப்படுகின்றாரா என்று அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.

பிரதமரின் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைவாக கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டதின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரினால் தங்களை நிகழ்வுக்கு வரவேண்டாம் என்று கூறப்பட்டதாகவும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தங்களை நிகழ்வுக்கு அழைக்கவேண்டாம் என்று கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பான நிகழ்வுகளுக்கு தங்களை அழைப்பதில் என்ன தவறு உள்ளது எனவும், சந்திரகாந்தன் தன்னைக்கண்டு அச்சப்படுவதாகவும் சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.

மாவட்டத்தில் காணப்படும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தங்களுக்கும் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது எனவும் கூட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன், தான் கூட்டத்திற்கு வந்தால் அச்சம்கொள்வதாகவும் அதன் காரணமாக நான் கூட்டத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் இங்கு சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

இந்த கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டாம் என்று அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

விவசாய ஆரம்பக்குழுக்கூட்ட நேரத்தில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை கூட்டி அந்த கூட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாதவகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்போது பிள்ளையான் என்னைக்கண்டு பயப்படுகின்றாரா என்று சாணக்கியன் கூறியபோது பயம் இல்லை, உங்களில் அன்பு என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச சிரித்துக்கொண்டே பதிலளித்தார். TW

1 comment:

Powered by Blogger.