மனித உயிர்களை விற்க வேண்டாம் - சஜித் வேண்டுகோள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) ஹம்பாந்தோட்டாவில் நடந்த 71 ஆவது எதிர்க் கட்சித் தலைவரின் நடமாடும் சேவையில் பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
"இப்போது ரூபாய் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்போது டொலர் 202 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. போஹொட்டுவ எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்கள் அரசாங்கத்தின் போது ரூபாயின் மதிப்பு இவ்வளவு குறையவில்லை என்பது எனக்கு நினைவிருக்கிறது. திறமையின்மை பற்றி பேசினார்கள், நான் கேட்க விரும்புகிறேன், டொலருக்கு எதிராக ரூபாய் 202 ஆக மதிப்பிடப்பட்டதா? அதுதான் தற்போதைய நிலைமை. மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.44 பில்லியன் அச்சிடப்பட்டது. இந்த பணம் எங்கே போகிறது? மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்டதா? அவ்வாறு எதுவும் பெறப்படவில்லை, ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகின்றனர் குறிப்பாக, அப்போது அளித்த சௌபாக்கியத்திற்கு வழிவகுக்கும் என வாக்குறுதியளித்த விடயம் இன்று மேற்கொள்ளப்படவிடல்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். "சௌபாக்கியத்தின் தொலைநோக்கு" ஆனால் அது அச்சிடப்பட்ட பணத்தின் செழிப்பு அல்ல, அது சிம்பாப்வேயின் செழிப்பு. சிம்பாப்வேவை விட நமது நாடு மிகவும் தீவிரமான பின்னோக்கிய சூழ்நிலையில் உள்ளது.
அன்பர்களே, இந்த நாட்டில் சீனி திருடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். 1590 கோடி திருடப்பட்டது. இந்த சீனி திருட்டை ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து செய்த அரசாங்கம் எதிர்காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். சீனி திருட்டுக்கு காரணமானவர்கள் தவிர்க்க முடியாமல் இந்த நாட்டு மக்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இப்போது, சீனியைத் திருடுவதோடு மட்டுமல்லாமல், புற்றுநோயான தேங்காய் எண்ணெயும் விற்பனை செய்யப்படுகிறது. நச்சு தேங்காய் எண்ணெய். தேசபக்தி என்ற பெயரில் நச்சு தேங்காய் எண்ணெயை மக்களுக்கு அனுப்புகிறார்கள். சமீபத்திய செய்தி என்னவென்று இப்போது உங்களுக்குத் தெரியுமா? புற்றுநோயான பயறு இப்போது பிடிபட்டுள்ளது. கள்ள புற்றுநோயான பயறு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே நண்பர்கள் சீனியைத் திருடி, மக்களுக்கு விஷ தேங்காய் எண்ணெயைக் கொடுத்து, இப்போது புற்றுநோயான பயறு வகைகளை சந்தைக்கு அனுப்புகிறார்கள்.
இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? வர்த்தக அமைச்சர் என்ன செய்கிறார்? வர்த்தக அமைச்சர் மக்களிடம் 1000 ரூபாய் நிவாரணப் பையை தருவதாகக் கூறுகிறார். 1000 ஒரு நிவாரண பை அல்ல 1000 குப்பை பைகள் தான் இது. இது "குப்பை" மனித நுகர்வுக்கு ஏற்ற உணவுப் பையையை வழங்குகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் ஆச்சரியப்படுவதில்லை. ஏன்? அவர்கள் சீனியிலிருந்து திருடி, தேங்காய் எண்ணெயிலிருந்து நச்சு தேங்காய் எண்ணெயையும் மக்களுக்கு வழங்கினர், இப்போது அவர்கள் புற்றுநோயான பயறு வகைகளையும் கொடுக்கிறார்கள். முழு நாட்டிலும் இந்த பயறு பருவம் உள்ளது. இந்த நாட்டு மக்களை நேசிக்கும், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய, மக்கள் சேவைக்கு பேராசை கொண்ட, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மக்கள் அரசாங்கம் தேவை என்பதை நான் தெளிவாக உங்களுக்கு சொல்கிறேன். அந்த அரசாங்கத்தை நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க மாட்டோம். நாங்கள் ஒரு கலப்பின அரசாங்கத்தை உருவாக்க மாட்டோம். இனிமேல், தூய்மையான ஒற்றுமை கொண்ட ஒரு அரசாங்கத்தையே உருவாக்குவோம். ஒரே நிர்வாகம், ஒரே பார்வை மற்றும் ஒரே பயணம் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த சேவையை அடைய நாங்கள் பணியாற்றுவோம். நாட்டு மக்களுக்கு புற்றுநோயான தேங்காய் எண்ணெயை வழங்கிய அந்த நிறுவனங்களின் வணிக உரிமங்கள் அவர்களின் பணத்திற்கு அடிபணியாமல் உடனடியாக நடைமுறையில் இருந்து ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும் இந்த அரசாங்க அமைச்சர்களுக்கு மிக தெளிவாகக் கூற விரும்புகிறேன். அதைத் தடுக்க வெளிப்படையான விசாரணையை நடத்துங்கள். கோர்ப்பரேட்(Cooperate)பணத்திற்கு அடிபணிய வேண்டாம். நிறுவனங்களின் பணத்திற்காக இந்த நாட்டில் மனித உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். மனித உயிர்களை விற்க வேண்டாம். நான் வர்த்தக அமைச்சரிடம் சொல்கிறேன், தயவுசெய்து 27 பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று செய்தித்தாளில் விளம்பரம் செய்வதன் மூலம் தொடங்கினார், ஆனால் அவை அனைத்தும் வெற்று வாக்குறுதிகள். இப்போது ஆயிரம் ரூபா பைகள்,குப்பைப் பையாக மாறிவிட்டன. அதுவும் ஒரு தவறான வாக்குறுதி. உங்களுக்கு அமைச்சராக இருக்க உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்று வர்த்தக அமைச்சரிடம் சொல்ல விரும்புகிறேன். நான் அவரை உடனடியாக இராஜினமா செய்யச் செல்லி வேண்டுகிறேன். நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது எங்கள் அரசாங்கத்தைத் தாக்க எவ்வளவு அழகான சொற்கள் பயன்படுத்தப்படுத்தினீர்கள் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள், ஆனால் அரசாங்கமும் வர்த்தக அமைச்சரும் தோல்வியடைந்துள்ளனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இப்போது பலவீனமான, முதுகெலும்பும் இல்லாத இந்த தோல்வியுற்ற அரசாங்கம் முழு நாட்டையும் தோல்வியடையச் செய்ய செயல்படுகிறது.
தோல்வியுற்ற இந்த அரசாங்கத்தை மக்களின் ஆசீர்வாதத்துடன் தோற்கடித்து எங்கள் சொந்த மக்களின் விருப்பின் போரில் அரசாங்கத்தை அமைப்போம். நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று நான் அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
Post a Comment