பாராளுமன்ற சிறப்புரிமைகள் துஸ்பிரயோகம் - சபாநாயகர் வருத்தம்
- TW -
நாடாளுமன்றில் சிறப்புரிமைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன வருத்தம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் எழுந்து நின்று கேள்வி எழுப்பும் போது அதனை தம்மால் நிராகரிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எனினும் எவ்வாறான கருத்துக்களை கூற வேண்டும், எதற்காக இந்த சிறப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
இந்த விடயத்தில் கட்சித் தலைவர்களுக்கும் மிக முக்கியமான ஓர் பொறுப்பு காணப்படுகிறது.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் நடுநிலைமையாகவும் பக்கச்சார்பின்றியும் நியாயமாக நடந்திருந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் கருதுகின்றனர்.
ReplyDelete