முஸ்லிம் செல்வந்தர்களே, இது உங்களின் அவதானத்திற்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று நண்பரும் டொக்டருமான ஹிஜாஸ் அவர்களுடன் ஒரு மருத்துவ அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட போது டொக்டர் பல்வேறு விடயங்களைப் பற்றி மனம் விட்டுப் பேசினார்.
உண்மையில் இருதயத்தில் ஓட்டை சம்பந்தமான கலந்துரையாடலில் ஓட்டைகள் ஒட்டாத ஓட்டைகள் எனப் படும் போது அதற்கு சந்திரசிகிச்சை செய்யப் படல் அவசியம் என்றும் தானாக சேரக் கூடிய ஓட்டை காலவோட்டத்தில் ஒட்டிவிடும் என்றும் டொக்டர் கூறினார். அந்த ரிபோர்டில் சாதாரணமானது நோர்மல் என்று கூறியிருந்தால் ஆறுமாதத்துக்கு ஒரு முறை இருதயத்தைப் பரீட்சித்து முடிவுகள் எடுக்கப் படும்.
மேலும் தற்போது சிறுவர்களுக்கான இருதய சிகிச்சை கொழும்பு லேடி ரிட்ஜ்வே நோனா வார்ட் ஹொஸ்பிடல் தான் திறமையாக செய்கின்றது என்று சொன்னார். அங்கு பணிபுரியும் இருதய அறுவைச் சிகிச்சை வைத்தியர் ஒருவரை தனியார் வைத்திய நிலையத்தில் சனல் பண்ணிக் காட்டுவதன் மூலம் லேடி ரிட்ஜ்வே ஹொஸ்பிடலில் அனுமதிக்கும் வசதியைப் பெறலாம். அங்கு சிகிச்சை இலவசமாகவே மேற்கொள்ளப் படுகின்றது,
இரண்டாவது முறை சிகிச்சை அவசரமாயின் பிராந்திய அல்லது மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ் மூலமாக லேடி ரிட்ஜ்வே ஹொஸ்பிடலுக்கு அனுப்புவார்கள்.
மூன்றாவது தனியார் வைத்தியசாலையில் ஒபரேசன் செய்வது. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தில் பாதித் தொகையை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பெறலாம். அரசாங்க உத்தியோகத்தராயின் அவர்களின் குடும்பத்துக்கான காப்புறுதி தொகையிலிருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு 200,000 ரூபா வழங்கப் படும். அரசாங்க உத்தியோகத்தருக்கு சந்திர சிகிச்சைகள் மேற்கொள்வதாயின் 10 முதல் 12 இலட்சம் வரை அரசாங்கம் வழங்கும்.
மேலும் டொக்டர் தெரிவித்த சில விடயங்களில் நமது சமூகத் தலைவர்கள் பள்ளிவாசல்கள் அல்லது செல்வந்தர்கள் தனிப் பட்ட கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இன்று ஏராளமான முஸ்லிம்கள் கிட்னி பிரச்சினை , இருதய பிளவு அறுவை சிகிச்சையென வருகிறார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள் அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்றும் அவ்வாறானவர்களுக்கு சகாத் நிதியம் ஒன்று அவசியம் உருவாக்கப் பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மைக் காலங்களில் நடமாடும் வைத்திய முகாம் செயற்திட்டத்துக்காக பல்வேற்ய் ஊர்களுக்கும் பயணித்த போது அங்கு முஸ்லிம்களே இல்லாத ஊரில் தனிக் குடும்பங்கள் வாழ்வதையும் அவர்கள் அந்தப் பிரதேச மக்களின் தயவிலும் உதவியிலும் வாழ்ந்து வருவதை அறிந்து கவலைப் பட்டதாகவும் தெரிவித்தார். அங்கு வளரும் பெண்பிள்ளைகள் நிலை எதிர்காலத்தில் என்னவாகும்?
மேலும் எத்தனையோ முஸ்லிம் பெண்கள் முஸ்லிமல்லாதவரை மணமுடித்து தமது வாழ்வைத் தொலைத்துள்ளனர். இவர்களின் இவ்வாறான தெரிவுக்கு அவர்களின் பொருளாதார நிலமை , வாழும் சூழல் என்பன காரணமாகின்றன.
முஸ்லிம் செல்வந்தர்கள் வை எம் எம் ஏ போன்றவை முஸ்லிம்களுக்கு குறைந்த செலவிலான குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவை விற்க முடியாத வகையில் டிரஸ்டுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். காணிகள் விலை குறைவான பிரதேசத்தில் முப்பது குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் அந்த குடும்ப உறுப்பினர்களின் பண்பாடுகள் கலாச்சாரம் மத விழுமியங்கள் போன்ற பல்வேறு விடயங்களைப் பாதுகாக்க முடியும் .
கொழும்பு, ராகம,ஜயவர்த்தனபுர, களுபோவில ஹொஸ்பிடலுக்கு வரும் வெளியூரைச் சேர்ந்த மத்திய மற்றும் எழைக் குடும்பங்கள் தங்குவதற்கு இடமின்றி தவிக்கின்றன. இதனால் பெரும் அசௌகரியங்களுக்கும் மன உளைச்சலுக்கும் அவர்கள் உள்ளாகின்றனர்.
ஒவ்வொரு ஹொஸ்பிடலுக்கும் வருபவர்களுக்கு அந்தந்த ஹொஸ்பிடலுக்கு பஸ்ஸில் செல்லக் கூடிய தூரத்தில் ( ஐந்து மிலோமீட்டருக்கு உட்பட்ட வகையில்) 10 அல்லது 20 அறைகள் கொண்ட ஒரு கட்டிடத்தை அமைத்து அங்கு இலவசமாகவும் கட்டணம் செலுத்தக் கூடியவர்களிடம் பணம் வசூலித்தும் அறைகளை வழங்குவதன் மூலமாக அந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க சுழற்சி முறையில் நிதியும் கிடைக்கும்.
வசூல்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்படி வரண்டி வகை கம்பனியாக ஒரு நிறுவன மயப்படுத்தப் பட்டிருந்தால் அதனூடாக பல்வேறு பயன்களை அடைய முடிவதுடன் செயற்திரண் மிக்கதாக கம்பனியை முன்னெடுக்க முடியும். மேலும் அவ்வாறான வேளையில் குறிப்பிட்ட ஒரு தனியார் வைத்திய சாலையுடன் ஒப்பந்தம் செய்து சிகிச்சைகளை குறைந்த செலவில் நோயாளிகளுக்கு பெற்றுக் கொடுக்க முடியும்.
தனது இந்த செய்தியை தனவந்தர்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் வை எம் எம் ஏ போன்ற நிறுவனங்களும் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.
Post a Comment