Header Ads



தற்காலிக கிரிக்கெட் நிர்வாகக் குழு நியமிப்பு


இலங்கை கிரிக்கட் நிறைவேற்றுக்குழுத் தேர்தல் வரை, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தலைமையில் 5 பேர் கொண்ட கிரிக்கட் முகாமைத்துவ குழு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறைவேற்றுக்குழுத் தேர்தல், எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த தேர்தல் இடம்பெறும் வரையில், அவசியமான கடமைகளையும், நிர்வாகத்தையும் மேற்கொள்வதற்காக, எதிர்வரும் 6ஆம் திகதி முதல், மே மாதம் 20ஆம் திகதி வரை செயற்படுவதற்காக குறித்த முகாமைத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் செயலாளராக அஷ்லி டி சில்வாவும், பொருளாளராக சுஜிவ முதலிகேவும், உறுப்பினராக சட்டத்தரணி உசித்த விக்மரசிங்கவும், அவதானிப்பாளராக அமல் எதிரிசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.