Header Ads



மூடிய இடங்களில் கடமைபுரிவது மிகவும் அபாயம், குளிரூட்டிய அறைகன் வேண்டாம், கட்டாயம் மாஸ்க் அணியுங்கள்


குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களில் கடமைப்புரிபவர்கள் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, தொற்று நோய் பிரிவின் பிரதான தொற்று நோயியல் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக  மூடிய இடங்களில் கடமைபுரிவது மிகவும் அபாயகரமானதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றால் பாதிக்கப்பட்ட யாராவது ஒரு நபர் யன்னல், கதவுகள் மூடப்பட்டுள்ள சிறிய அறையில் இருப்பாரானால்,விசேடமாக குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது, தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான இடங்களில் கடமைப்புரிபவர்கள் கூடுமானவரை கதவு, யன்னல்களைத் திறந்து வைத்து கடமைபுரியமாறு பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குளிரூட்டப்பட்ட அ​றையில்  பலர் இருப்பார்களாயின் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறான இடங்களில் கடமைகளுக்குச் சென்றவுட​னேயே  கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். அதேப்போல் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போதும் கைக்கழுவுவது  அவசியம் என்றார்.

No comments

Powered by Blogger.