உறவினர் வீடுகளுக்கு, செல்வதை மட்டுப்படுத்துக - சுகாதார அமைச்சு
இந்த முறை புத்தாண்டு காலப்பகுதியில் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கோரியுள்ளது.
கொவிட்-19 தொற்று சமூகத்தில் இருந்து இன்னும் முற்று முழுதாக நீங்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த முறை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பொது மக்கள், புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் வயோதிபர்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் வீடுகளில் உள்ளவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கொவிட்-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டிருந்தாலும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முடிந்தவரை உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதை மட்டுப்படுத்துமாறும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின சமூக மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க கோரியுள்ளார்.
Post a Comment