உறுதிப்படுத்தும் வரை சீன, தடுப்பூசி இலங்கையர்களுக்கு வழங்கப்படாது
பாதுகாப்பானது என சுகாதார அதிகாரிகளால் உறுதிப்படுத்தும் வரை இலங்கையர்களுக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசி வழங்கப்படாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த தடுப்பூசி குறித்த தரவுகளை ”தொற்றுநோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பகுப்பாய்வு செய்து வருகின்றது. எனினும், சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையிலிருக்கும் சீனப் பிரஜைகளுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது என்றார்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசிகளே இலங்கையர்களுக்கு தற்போது ஏற்படுகின்றன. இதேவேளை, ரஷ்யாவிலிருந்து ஒருதொகுதி ஸ்புட்னிக் -வி (Sputnik V) இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை கடந்தவாரம் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment