கொரோனா முன்னெச்சரிக்கை - நீர்கொழும்பில் நிலவரம் என்ன..?
- இஸ்மதுல் றஹுமான் -
கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்கொழும்பில் ஞாயிறு வாராந்த சந்தையும், சனி இரவு சந்தையும் நடைபெறுவதை தற்காலிகமாக தடை செய்துள்ளனர். இவை இவ்வாரம் நடைபெறவில்லை.
நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் குனரத்ன தெரிவித்தார்.
நீர்கொழும்பு நகரில் எழுந்தமான முறையில் பீ.சி. ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அன்மையில் தனியார் பாடசாலை ஒன்றிலும், தொழிற்சாலை ஒன்றிலும் 80 பேர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளன எனவும் தெரிவித்தார்.
நகரிலுள்ள கடைகளில் பெப்நிலையை அளவிடுதல், கைகளை கழுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும்.
ரமழான் மாத காலத்தில் பள்ளி வாசல்களுக்கு அதிகம்பேர் வருகை தருவதனால் அதனை 50 பேர்களாக மட்டுப்படுத்துமாறு கோரி பள்ளிவாசல்களுக்கு திங்கட் கிழமை கடிதம் அனுப்பவுள்ளதாக குனரத்ன மேலும் தெரிவித்தார். கொரோனாவின் புதிய தாக்கம் எமது பிரதேசத்தில் இல்லையெனவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவற்றை அமுல்படுத்துவதாக அவர் கூறினிர்.
Post a Comment