Header Ads



பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றவர் திடீர் மரணம்


பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நபர் திடீரேன மரணமடைந்துள்ளார்.

மாத்தறை, திக்வெல்ல பிரதேசத்தில் பொலிஸ் நிலையத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக 1990 சுவசிரிய அம்பியுலன்ஸிற்கு அழைக்கப்பட்டது. எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதறகு முன்னரே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திக்வெல்ல, யோனகபுர நைல்கலே பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையாகும்.

அவர் இரும்பு சேகரிக்கும் நடவடிக்கையின் போது தரப்பினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அவர் சென்றுள்ளார்.

முறைப்பாடுகளை செய்து முடிப்பதற்குள் அவர் உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.