Header Ads



வன் உம்மா வட்ஸப் குழு மூலம், அடிப்படைவாதத்தை பிரச்சாரம் செய்தமையே கைதுக்கு காரணம்

சஹ்ரான் ஹாசீம் உட்பட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் உறுதி எடுத்துக் கொள்ளும் காணொளியை இணையத்தளத்தில் வெளியிட்ட நபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து சிறிது நேரத்தில் இந்த காணொளி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேற்று இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர். இவர்களில் ஒருவரே குறித்த காணொளியை இணையத்தளத்தில் பதிவேற்றம் செகய்துள்ளார் என தெரியவருகிறது.

இவர்கள் வன் உம்மா என்ற பெயரில் வட்ஸ் அப் குழுவை ஆரம்பித்து கட்டார் நாட்டில் இருந்தவாறு பல்வேறு வகையில் அடிப்படைவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் இலங்கையில் இருந்து சென்று கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.

இலங்கை பொலிஸார் விடுத்த அறிவிப்புக்கு அமைய இவர்கள் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி கட்டார் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டியை சேர்நத 31 வயதான நபரும், திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Tamilwin

No comments

Powered by Blogger.