துட்டகைமுனு மன்னன் வழியில், பிரதமர் மஹிந்த - பேராசிரியர் மெதவாச்சியே தேரர் புகழாரம் (வீடியோ)
முதலில் பிரதமர், அவரது பாரியார் உள்ளிட்டோர் சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாலி மற்றம் பௌத்த கல்வி முதுகலை நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மெதவாச்சியே தம்மஜோதி தேரரை பிரதமர் மற்றும் அவரது பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றனர்.
இந்த முறையில் தர்ம உபதேசங்களை நடத்தும் கலையை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இம்முறையில் தர்ம உபதேசம் நடத்தும் பணியை துட்டகைமுனு மன்னர் செய்திருப்பதை நாம் அறிவோம். அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இவ்வாறு தர்ம உபதேச தொடரை முன்னெடுப்பது சிறந்த விடயமாகும் என இத்தால் நினைவூட்டுகிறேன் என சிரேஷ்ட பேராசிரியர் மெதவாச்சியே தம்மஜோதி தேரர் தெரிவித்தார்.
கௌரவ பிரதமர் ஒரு சிறந்த பௌத்த தலைவர் என்ற அடிப்படையில் நாட்டில் பெரும் நற்பெயர் உண்டு. அதேபோன்று நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் அன்பாக பேசப்படுவதையும் நினைவூட்டிய தம்மஜோதி தேரர், தேசிய தலைவர்கள் மத்தியில் நமக்குள்ள தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் குறிப்பிட்டாhர்.
கெப்படிகொல்லாவ குண்டு வெடிப்பின் போது பாதுகாப்பு பிரிவு வேண்டாம் என்ற போதிலும் மக்கள் மத்திக்கு சென்ற பிரதமர், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அன்று அதிரடி தீர்மானம் மேற்கொண்டார் என தெரிவித்த சிரேஷ்ட பேராசிரியர மெதவாச்சியே தம்மஜோதி தேரர், பிரதமரின் நேர்மை மற்றும் மென்மையின் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் 'மஹிந்த மஹத்தயா' என அன்புடன் அழைக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்களை சமாளித்து நாடு முன்னேற்றமடைந்து வந்தது. ஆனால் இந்த தொற்று நிலைமை காரணமாக நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் ஆட்சியாளர்களுக்கு உதவும் வகையில் மக்கள் செயல்பட வேண்டும் என சிரேஷ்ட பேராசிரியர் மெதவாச்சியே தம்மஜோதி தேரர் தெரிவித்தார்.
ஒரு மோசமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு, பொறுப்பு என்பது சட்டத்தால் ஒதுக்கப்பட்ட ஒன்று. கடமை என்பது மனதளவில் செய்யப்படும் ஒன்று. எங்களுக்கு பொறுப்பு மட்டுமல்ல, கடமையும் இருக்கிறது. பொறுப்பின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வது கடினம். கடமையின் ஒரு பகுதியை நாம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் மதவாச்சியே தம்மஜோதி தேரர் சுட்டிக்காட்டினர்.
Post a Comment