ஒரு மாதத்திற்கு முடக்க வேண்டும் - மக்களின் ஒத்துழைப்பு அது உரியவிதத்தில் கிடைக்கவில்லை என கவலை
அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளிற்கு ஒரு மாதகாலத்திற்கு தடை விதிக்கவேண்டும் என, இராஜாங்க அமைச்சர் சுசுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் காணப்படும் நிலைமையையும், இலங்கையில் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பின் அளவையும் கருத்தில் கொள்ளும்போது மருத்துவதுறையை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் ஒரு மாதகாலத்திற்கு அத்தியாவசியமற்ற செயற்பாடுகளிற்கு தடைவிதிக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொழில் கல்வி பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளை ஒருமாதகாலத்திற்கு முடக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒருமாதகாலத்தின் பின்னர் நிலைமையை மீளஆராயலாம் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் புதுவருட காலத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டபோதிலும் அது உரிய விதத்தில் கிடைக்கவில்லை இதன் காரணமாகவே கட்டுப்பாடுகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural
அமைச்சர் அவர்களே என் நீங்கள் இந்த முடிவு ஒரு மாசத்துக்கு முன் எடுக்க வில்லை உங்கள் பெருநாள் அல்லவா
ReplyDelete