Header Ads



கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான்குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்க வேண்டும் - ஹக்கீம்


- பாறுக் ஷிஹான் -

கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான்குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி சமூக சமய அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட 'அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)' நூல்   சனிக்கிழமை(10) மாலை(இரவு)  மருதமுனைஇ பொது நூலக கேட்போர் கூடத்தில் பழீல் மொலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் செனட்டர் மசூர் மௌலானா அரங்கில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் கூறியதாவது

 கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான்குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.எமது உள்விவகாரங்களை பற்றி பேச வேண்டும்.எமது உள்விவகாரங்களில் உள்ள விமர்சனங்களை பற்றி பேசப்போனால் எத்தனை மணித்தியாலம் எடுக்குமோ தெரியாது.அதாவது ஏராளமான உள்முரண்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றோம்.புரிந்துணர்வும் சகிப்பு தன்மையும் எம்மிடையே இல்லாமல் போவதை காண்கின்றோம்.இவ்வாறாக தறுதலைத்தனமாக ஒரு கும்பல் செய்த செயலையே இந்த நாடு பேசிக்கொண்டிருக்கின்றது என்றார்.

1 comment:

  1. உண்மையிலும் உண்மையானது.

    ReplyDelete

Powered by Blogger.