ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுவாரா சம்பிக்க..? தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என்கிறார்
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிதேர்தலிற்கு நீண்டகாலம் உள்ளது மாகாணசபைகள் உள்ளுராட்சி தேர்தல்களை மக்கள் சந்தித்த பின்னரே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை எதிர்கட்சி தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்,nஇதுவே தற்போதைய நிலைமை என குறிப்பிட்டுள்ள சம்பிக்க ரணவக்க மேலும் ஆளும்கட்சி வேட்பாளர் யார் என்பது தெரியாது பசில் ராஜபக்சவா அல்லது தற்போதைய ஜனாதிபதியா என்பது தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாமல்ராஜபக்சவா வேட்பாளர் என்பதும் தெரியாது எதுவும் உறுதியாகவில்லை எனவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டின் மக்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் புதியதலைiமுறை அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்தும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தினக்குரல்
Post a Comment