தற்போது நினைத்தாலும், கண்ணீர் வருகின்றது - மங்கள சமரவீர அபம்பலப்படுத்திய விடயம்
2015 இல் இலங்கையை அனைத்து நாடுகளும் கொண்டாடின என அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு தற்போதும் ஞாபகமிருக்கின்றது, நாங்கள் 2016 இல் ஜப்பானில் ஜி ஏழு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டவேளை முக்கிய கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதிக்கும் எனக்கும் அழைப்பு விடுத்தார்கள் நாங்கள் ஏனைய தலைவர்கள் வருவதற்கு முன்னர் உள்ளே சென்று அமர்ந்திருந்தோம் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
நான் சிறிசேனவிற்கு பின்னால் அமர்ந்திருந்தேன் அந்தஅறைக்குள்நுழைந்த ஒவ்வொரு தலைவரும் ஜனாதிபதி சிறிசேனவை கண்டதும் அவருக்கு அருகில் சென்று எப்படி கைகுலுக்கினார்கள் என்பதை தற்போது நினைத்தாலும் கண்ணீர் வருகின்றதுஎன மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
ஓபாமா மேர்கல் கமரூன் என ஜி 7 இன் அனைதது தலைவர்களும் ஜனாதிபதி சிறிசேனவிற்கு அருகில் சென்று கைகுலுக்கினார்கள் என மங்களசமரவீரதெரிவித்துள்ளார்.
2015 தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்குவதற்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கினார் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்து சிறிசேன அனுமதி வழங்கினார் 2016 பெப்ரவரி நான்காம் திகதி உரையில் சிறிசேன இதனை தெரிவி;த்துள்ளார் எனவும் மங்களசமரவீர குறிப்பிட்டுள்ளார். தினக்குரல்
Post a Comment