கொடிய கொரோனாவுக்கு குடும்பத்தில் 6 பேரை இழந்துவிட்டோம், மருத்துவர்களாகிய நாம் எதுவும் செய்ய முடியாதுள்ளோம்
நானும், எனது கணவர் சமீமும் இந்தியாவில் உள்ள உறவினர்களிற்கு, உதவ முயல்கின்றோம், ஆனால் அங்கு நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது என கருதுகின்றோம்என அப்ஷான் ஹக் தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பங்களை சேர்ந்த இருவர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ள அவர் இந்தியாவில் காணப்படும் நெருக்கடி குறித்து அதிர்ச்சியடைந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் மருத்துவர்கள் பலர் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அவர்தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கும்போது, எதுவும் செய்ய முடியாத நிலையில் எனது கணவர் உள்ளதை உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
வரணாசியிலும் ஹைதராபாத்திலும் உள்ள உறவினர்கள் காலையில் ஒக்சிசன் சிலிண்டரை தேடி செல்கின்றனர் பல மணிநேரங்களின் பின்னர் ஒரு சிலிண்டருடன் வீடு வந்து சேருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் கூட்டு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை இழந்துவிட்டோம் ஒரேநாளில் இருவரை இழந்துவிட்டோம் இது எங்கள் கூட்டு குடும்பத்தை பாதித்துள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.
அவர்கள் ஒருவரை புதைத்துவிட்டு வந்து பின்னர் மற்றைய நபரை புதைப்பதற்கு கொண்டு செல்கின்றனர் என
இது மூன்று நாட்களில் நடந்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நான் இந்தியாவில் பெரும் அவலத்தில் சிக்கியுள்ள உறவுகளிற்காக பிரார்த்தனை செய்கின்றேன் சர்வதேச சமூகம் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் என கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thinakkural
நான் தற்போது சென்னையில் இருக்கிறேன். இந்தியாவில் கட்டற்ற கொரோனா அவலம் என்கிற ஊடக செய்திகள் ஆச்சரியம் தருகிறது. தமிழகத்தில் அத்தகைய நிலமை இல்லை. வீதியில் நடந்துசெல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் படங்களையும் பொது வெளிகளில் பிணங்கள் எரியும் படங்களையும் உங்களைபோலவே நானும் ஆச்சரியத்துடனும் வேதனையுடனும் பார்க்கிறேன். மேற்படி ஊடக செய்திகள் கங்கை சமவெளிசார்ந்த உத்தர பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களின் நிலமையே காட்டுகின்றன. ஒட்டு மொத்த இந்திய நிலமை இதுவல்ல. வளற்ச்சியடைந்த மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நெருக்கடியிலும் வைத்தியம் சுகாதாரம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருக்களின் பங்கீடு மின்சாரம் என எல்லாதுறைகளுமே தொடர்ந்தும் சிறப்பாகவே இயங்கி வருகிறது. ஒரு லட்சத்துக்குக் கிட்டிய வடகிழக்கு மாகாண தமிழர்கள் குறிப்பாக மன்னார் திருகோணமலை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்கிறார்கள். தமிழகத்தில் வாழும் உங்கள் உறவுகள் பாதுகாப்பாக உள்ளனர்.
ReplyDelete