நீதிமன்ற வழக்குகள் தாமதம், 60 பில்லியன் ரூபாவை இழந்த அரசாங்கம்
நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதால் அரசுடமையக்கப்பட்டுள்ள பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகைகளில் 60 பில்லியன் ரூபாவை அரசாங்கம் இழந்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 வருட காலமாக இவ்வாறு வழக்கு நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசுடமையக்கப்பட்டுள்ள பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை தொடர்பான கணக்காய்வு அறிக்கை, சுங்க திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவில் உள்ளதால் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். hiru
Post a Comment