Header Ads



அனைத்து சாரதி அனுமதிபத்திர செல்லுபடி காலம் 6 மாதங்களால் நீட்டிப்பு - விசேட வர்த்தமானி வெளியானது


காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரின் கைச்சாத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.