உலகின் செல்வந்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - 5 ஆம் இடத்தில் பேஸ்புக் நிறுவனர்
போபஸ் பத்திரிகை இந்த ஆண்டிற்கான பெருஞ்செல்வந்தர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 2,755 பேர் பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள செல்வத்தை வைத்துள்ளனர்.
முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பேசோஸ் உள்ளார். அவர் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஏலன் மஸ்க் உள்ளார். கடந்த ஆண்டு அவர் 31ஆவது இடத்தில் இருந்தார்.
பிரான்ஸ் நாட்டு தொழிலதிபரான பெர்னாட் ஆர்னோல்ட் 3 ஆவது இடத்தை பிடித்திருப்பதோடு 4ஆவது இடத்தில் பில் கேட்ஸ் உள்ளார். 5ஆம் இடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளார்.
கொவிட்–19 சூழலால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்கள் செழித்து வளர்கின்றன. இந்த ஆண்டின் செல்வந்தர் பட்டியலில் உள்ளவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு சுமார் 13.1 டிரில்லியன் டொலர். கடந்த ஆண்டு அது 8 டிரில்லியன் டொலராக இருந்தது.
இந்த ஆண்டின் செல்வந்தர் பட்டியலில் புதிதாக 493 பேர் இணைந்துள்ளனர்.
Post a Comment