Header Ads



அதிவேக நெடுஞ்சாலையில் காரின் யன்னலில் பயணித்தவர்கள், தலா 5 இலட்ச ரூபாய் சரீரப் பி​ணையில் விடுதலை


அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்றின் யன்னலில் ஏறி , ஆபத்தான முறையில் பயணித்த, சந்தேகநபர்கள் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐவரையும் தலா 5 இலட்ச ரூபாய் சரீரப் பி​ணையில் விடுவிக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய இன்று (22) உத்தரவிட்டார்.

10 நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டை சந்தேகநபர்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவிருப்பதாகவும், இச்சம்பவத்துக்கு கவலை தெரிவிப்பதாகவும் பிணை சட்டத்தின் 14ஆம் உறுப்புரைக்கமைய எந்தவொரு நிபந்தனையின் கீழும் பி​ணை வழங்குமாறு சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கமைய, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கண்டி- உடதலவின்ன மற்றும் அக்குரணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.