500 வருட வரலாற்றை கொண்ட ஜெயிலானி, பள்ளிவாசலை இழக்க காரணம் என்ன..?
கடந்த போய தினத்தில் பல்லாயிரக்கணக்கான பெளத்த மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடினர்.பன்சலை கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நெத்.எப்.எம் ஊடக அனுசரணை வழங்குகின்றது.அங்கு பெரிய சிரமதான பணி ஒன்று நடக்க இருப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
சுமார் 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட பள்ளியை ஒரு சமூகம் என்ற வகையில் இழந்து விட்டோம்.
இங்கு சம்பிரதாய முஸ்லிம்கள் என்று தம்மை அடையாளப்படுத்தி கொள்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், இனவாதிகளுக்கு முன்னால் அனைவரும் ஒன்று. இனவாத நிகழ்ச்சி நிரல் அனைத்து முஸ்லிம் கட்டிடங்களையும் ஒன்றாக தான் பார்க்கின்றனர்.
எனவே தமக்கு பிடிக்காதவர்களை குறிப்பாக சிர்க் , பித்அத்களை ஆதரிக்காத பெரும்பான்மை முஸ்லிம்களை வஹ்ஹாபிகள் என்றும் , வஹ்ஹாபிசம் என்பது தீவிரவாதம் என்ற கருத்தையும் ஆழமாக பதிவு செய்து விட்டீர்கள்.இனவாத அமைப்புகளுக்கு குறிப்பாக ஞானசார பிக்குவுக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் , ஜமாஅத்கள் , அமைப்புக்கள் , கல்வி நிலையங்கள் , மத்ரசாக்கள் , அரசாங்கத்தில் பணி புரியும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக, அடிப்படைவாதிகளாக கட்டமைப்பு செய்தீர்கள்.
இதன் மூலம் உங்களுடைய அதிகாரத்தையும் , சிர்க் , பித்அத்களை பாதுகாக்கலாம் என்று கனவு கண்டால் அந்த கனவு பிழை என்பதற்கு ஜெயிலானி பள்ளி சாட்சி.
அங்கு மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் இடம் பெற்றன என்பது உண்மை.
அவற்றை இல்லாமல் செய்ய வேண்டும் என்று புறப்பட்ட ஜமாத்களும், அமைப்புகளும் தனியே பள்ளிகளை கட்டி வேறாக சென்றார்களே தவிர இத்தகைய சியாரங்கள் , பித்அத்கள் உள்ள இடங்களை அவர்களால் சீர் செய்ய முடியவில்லை. ஏன்..?
சமூகத்திற்குள் ஏற்பட வேண்டிய சீர் திருத்தத்தை விட்டு சீர்திருத்தம் செய்வதாக சொல்லி பிரிந்து செல்வதால் உண்மையான சீர்திருத்தம் இடம்பெறுவதில்லை. மென் மேலும் சமூகத்தை பிரிப்பதால் சீர் திருத்தம் ஏற்படுமா? சமூகம் பலவீனப்படுமா?
இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் அனைத்தையும் விட ஒற்றுமை தான் ஆக முக்கியம் என்பது தான் உண்மை.
அத்துடன் முஸ்லிம்களின் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் பலமான தலைமைத்துவமும் , முஸ்லிம்களோடு தொடர்பான சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ள இடங்கள் பற்றிய தெளிவும் , அத்தகைய இடங்களை பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சியும் காலத்தின் தேவையாகும்.
- சப்ராஸ் சம்சுதீன் -
Very Very True Brother Safras Samsudeen. We missed one of our valuable ancient land/Place.
ReplyDeleteWe have many many unwanted Jamaaths but no Unity.
கொள்கைவாதிகள் என்று சொல்லிக் கொண்ட கூட்டத்தினர் இலங்கையில் உள்ள எத்தனை சியாரங்களை உடத்துத் தள்ளினார்கள்.எத்தனை பள்ளிவாசல்களில் சிர்க்,பித் அத் நடக்கின்றன என்று கூறி சண்டை பிடித்தார்கள்.எத்தனை பள்ளி நிர்வாகங்களை நிர்வாகம் செய்ய முடியாமல் தடுத்தார்கள்.இவை போன்ற விடயங்களை செய்து பெரும்பான்மையடம் முஸ்லிம் சமூகத்தில் பிரிவினை உண்டு என்பதைக் காட்டிக் கொடுத்தார்கள்.கட்டுரையில் கூறுவது போன்று பிரச்சினை இல்லாமல் வேறு பள்ளி கட்டிக் கொண்டு கொள்கைவாதிகள் வில்கிச் செல்லவில்லை.போதாக் குறைக்கு ஈஸ்டர் தாக்குதல் நடாத்தி முழு முஸ்லிம் சமூகத்துக்கும் இழுக்கை ஏற்படுத்தி பெரும் பிரச்சினையை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்திச் சென்றவர்கள் தான் இந்தக் கொள்கை வாதிகள்.பிரச்சினையை உருவாக்கினவர்களே அவர்கள் தான்.கட்டுரையில் ஏதோ வெள்ளை பூசுகிறார்கள்.
ReplyDeleteFirst of all, should change the ACJU. There is no meaningful leaders. All Muslims should concern this
ReplyDeletePeople sometime forget that the chain is stronger as long as its links are stronger.
ReplyDeleteIraivanudaiya masjidhai paathuhaakka neengal kavalaippada theva illai avargal thalai keelaga ninralum pansalai katta mudiyathu kurithu vaithu kollungal......!
ReplyDeleteIraivanudaiya masjidhai paathuhaakka neengal kavalaippada theva illai avargal thalai keelaga ninralum pansalai katta mudiyathu kurithu vaithu kollungal......!
ReplyDeleteஇவருடைய வாதம் படி .ஷிர்க்கும் வேண்டாம் ஷிர்க்கு செய்கிற இடமும் வேண்டாம். ஸியாரம் செயவது ஷிர்க்கு என்று சொல்லி தானே உடைத்தீர்கள் அப்போ அந்த இடத்தை பாதுகாக்க வெண்டும் என்று கட்டுரையாளர் பேசுவது காரணம், தமிழ்பேச்சுதிறனுள்ள மார்க்கம் பேசுவர்களை அறிஜர்களாகவும் , சவூதி அரேபியாவை மார்க்கமாகவும் ,எடுத்துக்கொண்டதன் விளைவுதான் திரு சம்சுதீன் போன்றவர்கள்.
ReplyDeleteகத்தம், பதிகா,மவ்லீது ஓதுவது ,திக்ரு மஜ்லிஸ் ,40 நாள் / 4 மாசம் ஜாமத்தில் போவது ,ஜும்மாரதிரி போவது , ஸியாரத்திட்டுக்கு போவது ,குனூத் ஓதுவது , இவை தானே கட்டுரையாளர் சொல்லும் ஷிற்கு பிதுஅத்து சமீபத்தில் சூனியத்தை நம்பிவாவான் காபிர் என்ற Cetificate வெறு
குரானும் கஹதீதும் என்று சொல்லி ,இஸ்லாமிய உம்மத்தை ஜமாத்துகளாக பிரித்து ,குனூத் ஓதுவது கூடாது ,என்று சொல்லி ஒரு ஊரில் ௨ பள்ளிகள் காட்டியது யாருடைய சாதனை.
கல் எரிந்தவனை விட்டு விட்டு கல்லை குறை சொல்லுவது எப்படி சரியாகும்.
இப்பித்தார் நிகழிச்சி ,[சமுகப்பணி ???] ,பாயான் நிகழிச்சி , இவை அனைத்தும் விதம் விதமாக போட்டோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி,அரபு நாட்டில் பணம் வசூலித்து சுகமாக வாழ்தவர்கள் எங்கே இபோது
this place is only worth just for an ancient historical matter, nothing to do with islam. no need to worry about missing. i have witnessed myself in this so called masjid (jsut an old building). may allah fogive them all..
ReplyDelete