சிம்பாபே நாடு போன்று இலங்கை, மார்ச் மாதம் மாத்திரம் 4000 கோடி ரூபா பணம் புதிதாக அச்சடிப்பு - சம்பிக்க
நான்கு மின் மேம்பால புகையிரத சேவைகளை நிர்மானிக்க அன்மையில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.2016 ஜனவாரி நல்லாட்சி அரசாங்கத்தில் பெருநகர அபிவிருத்தி அமைச்சின் திட்டத்திலுள்ள இந்த நான்கு புகையிரத சேவைகளையுமே இவர்கள் புதிய திட்டமாக காட்ட முயற்சிக்கின்றனர்.கடுவல-புறக்கோட்டை,கடவத்த-கொழும்பு,மொரட்டுவ-பிலியந்தலை மற்றும் பத்தரமுள்ள-புறக்கோட்டை ஆகிய நான்கு சேவைகளும் 2016 ஆம் ஆண்டு பெருநகர அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளவையாகும்.இதில் புதிதாக புகையிரத பாதையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். பெரல்லையிலிருந்து தேசிய கண் வைத்தியசாலை ஊடாக மருதானை வரை பாதையை நீட்டியுள்ளனர்.மற்றயது கடுவலை-புறக்கோட்டை பயணப் பாதையை கடுவலையிலிருந்து அத்துருகிரிய வரை நீட்டியுள்ளனர்.இந்த பாதை நீடிப்பு சிறந்தது.இது மாத்திரம் தான் வேறுபாடு.மொரட்டுவ-புறக்கோட்டை திட்டத்தை அமுல்படுத்த பல தேசிய நிறுவனங்கள் முன்வந்தன.தகுதியான நிறுவனங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிறுவனங்களும் அவற்றில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.இதை நாங்கள் அரச தனியார்(Public PrivetPartnership)திட்டமாகவே முன்னெடுக்க திட்டமிட்டிருந்தோம். நாம் எதிர்க்கப் போவதில்லை. 0.01% சலுகை அடிப்படையில் ஜப்பான் நாட்டின் ஆதரவுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். இந்த அரசாங்கம் இதை கருத்திற் கொள்ளாது ஜப்பானைப் பகைத்துக் கொண்டது. இறுதியில் வேறு வழியில்லாமல் மீண்டும் ஜப்பானிடம் நிதி உதவி கோரிய போது 0.7% வட்டி விகிதத்தில் வழங்கவே ஜப்பான் முன்வந்தது. இலகுவாக கிடைத்ததை நிதி உதவியை இறுதியில் இல்லாமலே ஆக்கிவிட்டனர்.
கடுவலை-புறக்கோட்டைப் பாதையை கடுவலையிலிருத்து ஆரம்பிக்க பிரதான நோக்கம் கம்பஹா மாவட்ட பிரவேசங்களையும்,பியகம வாகன நெரிசலை கட்டுப்படுத்தவே கடுவலைப் பிரதேசத்தை தேர்வு செய்தோம்.
கடவத்த-புறக்கோட்டைப் பாதையின் ஆரம்ப வேலைகளை நாங்களே ஆரம்பித்தோம். இன்று அதன் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது.
கடுவலை-புறக்கோட்டை திட்டத்திற்கான செலவீனம் 2.2 பில்லியனாகும். அதில் 1.8 பில்லியன் புகையிரத பாதைக்கும்,17 புகையிரத தரிப்பிடங்களுங்களுக்கும் அதனோடு இனைந்த கட்டமைப்பிற்கும் செலவாகிறது.மிகுதி 1.3 பில்லியன்களும் இடம்,மின்சாரம்,கழிவுப் பொருள் முகாமைத்துவம்,நீர் உட்பட ஏனைய இனைந்த பௌதீக உட்கட்டமைப்பிற்கு செலவாகிறது.
இந்த அரசாங்கம் கையான்ட மேசமான திட்டம் தான் இந்த நான்கு புகையிரத திட்டங்களின் நிர்மானப் பனிகளையும் ஒரே ஓர் தனியர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.ஜப்பானுடன் பகைத்துக் கொண்டதும் இதனால் தான்.தனது பிரதொரு நண்பருக்கு வழங்கவுள்ளனர்.
தனியர் நிறுவனத்திற்கு வழங்குவதால் அரசாங்கத்திற்கு செலவீனம் ஏதுமில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.அடிப்பையாக நூற்றுக்கு 6% வீதமே செலவு எனக் குறிப்பிடப்பட்டாலும் உன்மையில் 40% செலவீனங்களை அரசாங்கம் பெறுப்பேற்கவுள்ளது.இது பாரிய நஷ்டமாகும்.ஜப்பான் உதவியுடன் நாங்கள் இலாப நோக்கிலயே செயற்படுத்தினோம்.
இந்த அரசாங்கம் சிங்கராஜ ஊடாக லங்காகம வீதியை நிர்மானித்தது மக்கள் நலன் என்றே நினைத்தோம். ஆனால் இறுதியில் பார்த்தால் ஹம்பந்தோட்டைக்கு நீர் கொண்டு செல்ல நிர்மாணிக்ப்படும் நிர்பாசனத் திட்டத்திற்குரிய கட்டுமனாப் பொருட்களை இலகுவாக கொண்டு செல்லவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அரச வருமானமும் குறைந்து சர்வதேச நிதி உதவிகளும் குறைந்து கடன் பெற்றுக் கொள்ளவும் முடியாத நிலையில் சிம்பாபே நாடு போன்று மார்ச் மாதம் மாத்திரம் 4000 கோடி ரூபா பணம் புதிதாக அச்சடித்துள்ளனர்.
கொழும்பு ஆர்கேட் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படமை,ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை,அவரிடமுள்ள நவீன ரக் கைத் துப்பாக்கி மற்றும் 2025 ஜனாதிபதி தோர்தல் தொடர்பான ஊடகவியலாளர்களின் கோள்விக்குப் பதிலளித்தார்.
Post a Comment