Header Ads



மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புடன் பிறந்த குழந்தை - ஈராக்கில் அதிசயம்


மனித வரலாற்றில் முதன் முறையாக ஈராக்கில் 3 பிறப்புறுப்புடன் ஆண் குழந்தை பிறந்து அதிசயத்தை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் அதில் இரண்டை வெட்டி எடுத்துள்ளனர்.

வடக்கு ஈராக்கின் மொசூலுக்கு அருகிலுள்ள டோஹுக் நகரிலே இந்த குழந்தை பிறந்துள்ளது.

எங்களுக்கு தெரிந்த வரை உலகிலேயே triphallia என்றும் அழைக்கப்படும் மூன்று பிறப்புறுப்புடன் ஆண் குழந்தை பிறந்ததாக பதிவு செய்யப்பட்டது இதுதான் முதல் முறை.

மனிதர்கள் வரலாற்றில் இதேபோன்ற 3 பிறப்புறுப்புடன் குழந்தை பிறந்ததாக இதுவரை ஏதும் பதிவாகவில்லை என டாக்டர் ஷாகிர் சலீம் ஜபாலி கூறினார்.

பிறக்கும் 6 மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் diphallia எனப்படும் இரண்டு பிறப்புறுப்புடன் பிறக்கும். ஆனால், முதன் முறையாக ஈராக்கின் டோஹுக் நகரில் 3 பிறப்புறுப்புடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் 3 பிறப்புறுப்பகளில் ஒன்று மட்டுமே செயல்பட்டது. மற்ற இரண்டு உறுப்புகளால் குழ்நதைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றாலும் அதை அகற்றுவது நல்லது என மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் இரண்டு செயல்படாத பிறப்புறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டதாக டாக்டர் ஷாகிர் சலீம் ஜபாலி கூறினார்.

No comments

Powered by Blogger.