இலங்கைக்கு இது, மிக ஆபத்தான நிலை - 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கோவிட் பரவலில் கொழும்பு, கம்பஹா, குருணாகல் மாவட்டங்கள் மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக மாறியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் தினமும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.
இந்த மாவட்டங்களை தவிர இலங்கையில் பல பிரதேசங்களில் கோவிட் கொத்தாணிகள் ஏற்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இலங்கைக்கு இது மிகவும் ஆபத்தான நிலைமை. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
வார இறுதி நாட்களில் ஓரளவுக்கேனும் மக்களின் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். Tw
Post a Comment