Header Ads



சஹ்ரானின் மாமா அடங்கலாக, 3 பேர் கைது


- அததெரண -

உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசீமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குளியாப்பிட்டிய - கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

சஹ்ரானினால் நடாத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.