ஹக்கலயில் விபத்து - 3 பேர் மரணம் (படங்கள்)
நுவரெலியா- வெலிமட பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் இன்று -01- பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
லொறியொன்று முன்னாள் பயணித்த ஓட்டோவுடன் மோதியதால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியால் லொறியைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் பயணித்த ஓட்டோவுடன் மோதியுள்ளது.
இதனையடுத்து, ஓட்டோவில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment