சுரங்கத்திற்குள் தடம்புரண்ட புகையிரதம் - 36 பேர் பலி - (படங்கள்)
தாய்வானின் கிழக்கு பகுதியில் புகையிரதம் தடம்புரண்ட விபத்தில் 35க்கும் அதிகமானவாகள் உயிரிழந்துள்ளனர்.
350பேருடன் பயணித்துக்கொண்டிருந்த 408 டரகோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 70 பேர் புகையிரத பெட்டிகளுக்குள் சிக்குண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.புகையிரதப்பெட்டிகளுக்குள் சிக்குண்டுள்ள பலர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்வானின் பாரம்பரிய விடுமுறையொன்றிற்காக பெருமளவானவர்கள் இந்த புகையிரதத்தில் டைட்டுங்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர் என்ற பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் புகையிரதம் தடம் புரண்டுள்ளது என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதைக்குள் உள்ள பெட்டிகளை சென்றடைவது கடினமாக உள்ளது அதற்குள் பொதுமக்கள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment