Header Ads



வெள்ளையினத்தவர் வாழும் 35 நாடுகள் இணைந்தே, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன


வெள்ளை இனத்தவர்களின் 35 நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

டீடபில்யூவின் டிம்செபஸ்டியனிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் ஜெனீவா தீர்மானம் நல்லிணக்க முயற்சிகள் குறித்து தெரிவித்துள்ளதாவது.

இதுவரை இலங்கை தொடர்பான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கொண்டுவருகின்றது.

இது நியாயமானதா?

இது நியாயமானதா என நாங்கள் மனித உரிமை பேரவையிடம் கேள்வி எழுப்பவேண்டும்.

இந்த 40 நாடுகள் யார்? 35 நாடுகள் ஐரோப்பாவை சேர்ந்தவை-ஏனைய ஐந்து நாடுகள் ஐரோப்பாவிற்கு வெளியே உள்ளன

ஆகவே 35 வெள்ளையினத்தவர்களின் நாடுகள் ஒன்றிணைந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள,இதுஎந்த விதத்திலும் இலங்கையின் மனித உரிமைகளுடன் தொடர்புடையதில்லை.

இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது குறித்து-

இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநி ஆரம்பத்தில் ஆற்றிய உரையை பாருங்கள் அவர் நாடுகளை இலக்கும் வைக்கும் தீர்மானம் தவறான எனது தெரிவித்தார் – பின்னர் அவர்கள்  வாக்கெடுப்பினை தவிர்த்துக்கொண்டனர் அதுவே அவர்களின் கொள்கை.

நல்லிணக்கத்தை திணிக்க முடியாது

சர்வதேச சமூகம் எங்களைமிகவும் தீவிரவமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையில் மிக நீண்டகாலமாக நீடிக்கின்ற பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு வேறு எந்த நாட்டையும் அமைப்பினையும் விட இலங்கை அதிக ஆர்வமாக உள்ளது.

இலங்கை சிறிய நாடு சிறிய சனத்தொகையை கொண்டது ஐக்கியம் சமாதானம் ஆகியன வேறு எவரையும் விட மிகவும் முக்கியமானவை ஆனால் அது எங்கள் மத்தியிலிருந்து உருவாகவேண்டும் - எவரும் நல்லிணக்கத்தை திணிக்க முடியாது

தினக்குரல்

No comments

Powered by Blogger.