இலங்கையில் 3000 முதல் 4000 சீன பிரஜைகள் மட்டுமே வாழ்கின்றனர்: சீனத் தூதரகம்
இலங்கைக்குள் 3000 முதல் 4000 வரையிலான சீனர்களே உள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சீனா அன்பளிப்பாக வழங்கிய 6 இலட்சம் சினோர்பாம் கோவிட் தடுப்பூசிகளில் ஒன்று அல்லது இரண்டு வீதமான தடுப்பூசிகள் இவர்களுக்கு செலுத்தப்படவுள்ளன.
சுமார் 3 இலட்சம் குப்பிகள் அவர்களுக்கு போதுமானதாக அமையும்.
ஏனையவை இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதனை தவிர்த்து சீனாவின் கோவிட் தடுப்பூசிகள் முழுமையாக இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு மாத்திரமே செலுத்தப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment