சஹ்ரான் குழுவிடம் 30 மில்லியன் மீட்பு, ஆடம்பரமாக வாழ்ந்திருக்கலாம், இஸ்லாமிய அரசினை நிறுவ நிதியை பயன்படுத்தியுள்ளனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு, இப்ராஹிம் என்பவரே நிதி உதவி வழங்கினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இப்ராஹிம் என்ற நபர் தற்போது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக அந்த நபர் 50 மில்லியனை செலவிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது சகாக்களிடம் 30 மில்லியன் மீட்கப்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர் அந்த பணத்தை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் ஆனால் ஆனால் இஸ்லாமிய அரசினை உருவாக்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எந்த நாடும் இந்த நிதியை வழங்கவில்லை என தெரிவித்துள்ள அவர் இப்ராஹிமின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டார்கள் மகளும் தன்னை தெமட்டகொடையில் வெடிக்கவைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
தினக்குரல்
Post a Comment