Header Ads



வைத்தியசாலைகளை தயார்படுத்துங்கள் - மே மாதம் 3 வது கொரோனா அலை - PHI கடும் எச்சரிக்கை


புது வருடத்திற்கு முன்பாக பொதுமக்கள் சுகாதாரவழிகாட்டுதல்களை மோசமாக புறக்கணித்துள்ளதால் மே மாதமளவில் கொரோனா வைரசின்மூன்றாவது அலை இலங்கையை தாக்கும் என எதிர்பார்ப்பதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் பொதுமக்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையை சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமலே முன்னெடுக்கின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மிஸ் ஸ்ரீலங்கா- சுற்றாடல் விவகாரம் தேங்காய் எண்ணெய் பிரச்சினை போன்றவை மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ் விவகாரத்தினை விட முன்னிலை பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இயல்புவாழ்க்கை திரும்பிவிட்டது என மக்கள் நம்பத்தொடங்கிவிட்டனர், கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அவர்களின் மனதிலிருந்து அகன்றுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படும் நிலையை மீண்டும் உருவாக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு மக்கள் தங்கள் நாளாந்த நடவடிக்கைகளை அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் முன்னெடுக்கின்றனர், பொருட்கொள்வனவு போக்குவரத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் பாரதூரமான விடயம் மூன்றாவது அலை தாக்கும் போதுதான் இது எவ்வளவு பிரதானமான விடயம் என்பதை மக்கள் உணரப்போகின்றார்கள் என தெரிவித்துள்ள மகிந்த பாலசூரிய நாங்கள்  இது குறித்து எச்சரிக்கை விடுத்து வந்துள்ளோம் தற்போது இது தாமதமாகிவிட்டது,நாங்கள் விளைவுகளை அனுபவிக்க – எதிர்கொள்ள வேண்டியதுதான் என தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் உருவாககூடிய புதிய கொத்தணிகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவதற்காக அதிகாரிகளை மருத்துவமனைகளை தயார்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தினக்குரல்

No comments

Powered by Blogger.