3 வேட்பாளர்களை முன்னிறுத்துவதை நிராகரிக்க பங்காளிகள் தீர்மானம் - 19 ஆம் திகதி பிரதமர் தலைமையில் தீர்வு
மாகாண சபை தேர்தலின் போது தொகுதிக்கு கட்சியொன்றின் 3 வேட்பாளர்களை முன்னிறுத்தும் யோசனையை நிராகரிக்க ஆளும் கட்சியின் சில பங்காளி கட்சிகள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் கலந்துரையாடலின் போதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்காரவும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் எமது மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், வீரசுமன வீரசிங்க, மற்றும் முன்னாள் அமைச்சர் டிவ் குணசேகர ஆகியோரும் அதில் கலந்து கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
எனினும் ஏப்ரல் 19 ஆம் திகதி பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசின் பலத்தை குறைந்தது மூன்றில் ஒன்றாக ஆக்குவதற்கு திட்டமிட்ட செயற்பாடொன்றை ஏனைய எல்லாக் கட்சிகளும் சேரந்து முன்னெடுத்தால் சர்வாதிகாரத்தை அடக்க முடியுமாகும்.அதுவே ஏனைய எல்லாக்கட்சிகளுக்கும் பலமாகவும் அமையும்.
ReplyDelete