Header Ads



ரஷ்யாவின் தடுப்பூசி 2 முறை போட்டபிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ஜென்டின ஜனாதிபதி


அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் சனிக்கிழமையன்று கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது.

ஆல்பர்டோ பெர்னாண்டஸ் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தனக்கான கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையம் செலுத்திக்கொண்டார்.

அவர் ஜனவரி 21-ஆம் திகதி ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸையும் பிப்ரவரி 11-ஆம் திகதி இரண்டாவது டோஸையும் பெற்றார்.

இருப்பினும், சமீபத்தில் லேசான அறிகுறிகளை அனுபவித்து வந்த அவர், சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு Covid-19 தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா வைரஸால் வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்களின் வரிசையில் இப்போது ஆல்பர்டோவும் இணைந்துள்ளார்.

அதேசமயம், இரண்டு டோஸ்களைப் பெற்ற பிறகும் நேரமறையாக பரிசோதிக்கப்பட்ட முதல் உலகத்த தலைவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெர்னாண்டஸ் தொடர்ந்து லேசான தலைவலியை அனுபவித்துள்ளார் மற்றும் அவரது உடல் வெப்பநிலை 99.1 டிகிரியை எட்டிய நிலையில், சனிக்கிழமை PCR சோதனை செய்தபோது தொற்று உறுதியானது.

கடந்த வெள்ளிக்கிழமை தனது 62-வது பிறந்த நாளை கொண்டாடிய ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ், தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். "நான் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன், நல்ல உற்சாகத்தில் இருக்கிறேன்" என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.

நாட்டின் 45 மில்லியன் மக்களில், 683,771 பேர் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுள்ளனர், ஒட்டுமொத்தமாக 4.18 மில்லியன் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.