புஷ்பிகாவின் கிரீடத்தை பறித்த, ஜூரிக்கு 20 வருட சிறைத்தண்டனையா...?
குறித்த செயற்பாட்டுக்காக உலக அழகி கரோலின் ஜூரியிடம் இழப்பீடும் கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,
நடுவர் மன்றத்தை மீறி அவரது சக்தியைக் காட்டுவதற்கு கரோலின் ஜூரி முனைந்துள்ளமையையே அவரது செயற்பாடு காட்டுகின்றது.
அந்தவகையில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கரோலின் ஜூரி மீது வற்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல், திருட்டு மற்றும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படலாம்.
இதேவேளை போட்டியின் ஏற்பாட்டுக் குழு, கரோலின் ஜூரிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும்வாய்ப்புள்ளது.
மேலும், குறித்த நிகழ்ச்சியில் கரோலின் ஜூரியின் நடவடிக்கைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாதவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற, திருமதி இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர்.
அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.
அதன்பின்னர் ஜூரி, மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்து அவரை நிகழ்வின் வெற்றியாளராக அறிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்தமையுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Post a Comment