Header Ads



மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை பிரதமருக்கு வழங்கி வைப்பு


மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷக்கு இன்று (22) முற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.

ஆண்டறிக்கையின்படி, மக்கள் வங்கியின் வரிக்கு முந்தைய இலாபம் ரூபாய் 21 பில்லியனும், வரிக்குப் பிந்தைய இலாபம் ரூபாய் 14 பில்லியனும் ஆகும்.

2020 ஆம் ஆண்டிற்கான மக்கள் வங்கியின் பங்கு இலாபம் ரூபாய் 3.5 பில்லியன் எனவும், அரச வரி ரூபாய் 14 பில்லியன் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிதிக் கொள்கையைப் பின்பற்றி மக்கள் வங்கி இந்த ஆண்டில் 25 பில்லியன் ரூபாய் இலாபம் மற்றும் ரூபாய் 15 பில்லியனுக்கும் அதிகமான வரி வருவாயை எதிர்பார்ப்பதுடன், எதிர்பார்க்கும் பங்கு இலாபம் 3 பில்லியனாகும்.

குறித்த நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் கொடிதுவக்கு, நிதி அதிகாரி அசாம் அஹமட் மற்றும் விநியோக நிறைவேற்று அதிகாரி நாலக விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

No comments

Powered by Blogger.